வேளாண் பொருட்கள், உரத்தட்டுப்பாட்டை போக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

0 488
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளான நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப்பேட்டை, திருநெடுங்குளம், அசூர், வேங்கூர் ஆகிய ஊராட்சிகளில் விவசாய நிலங்கள் தற்போது பயிரிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம கூட்டுறவு கடன்சங்கங்களில் உரத் தட்டுப்பாடு அதிகமாக நிலவி வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு ஒரு தட்டுப்பாட்டை போக்க கோரியும், மேலும் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்கடன் தாமதமாக வழங்கப்படுவதை கண்டித்தும், நூறு நாள் வேலை செய்த மக்களுக்கு தற்போது நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை உடனடியாக வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திருவெரும்பூர் விவசாயிகள் சங்கங்களின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை திருவெறும்பூர் விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கணேசன் தலைமை தாங்கி நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் சங்கிலி முத்து, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தெய்வ நீதி உட்பட விவசாயிகள் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், தோழமை கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.