பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

0 495
Stalin trichy visit

திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சஞ்ஜினி. இவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனே இதுகுறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்ஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சஞ்ஜினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.