திருச்சி ஜீவாநகர் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 67). இவர் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் இரவுநேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிவாசல் முன்பு வழியில் படுத்திருந்த ஒரு வாலிபரை வழியை விட்டு ஓரமாக படுக்க சொல்லியுள்ளார். இதில் அந்த வாலிபர் திடீரென எழுந்து பாலகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி, பாலகிருஷ்ணன் கையில் வைத்திருந்த குச்சியை பிடுங்கி அவரது தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கொடுத்த புகாரின் மீது கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் பாலகிருஷ்ணனை தாக்கிய திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த ஹாமிம் முஸ்தபா (வயது 23) என்பவர் மீது வழக்குபதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.