நீண்டநாள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு; வேட்பாளர் மதிவாணன் அனல்பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரம்!

0 305
Stalin trichy visit

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. எனவே வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்காக 80 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடைசி நாளான இன்று தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருச்சி மாநகராட்சி 16வது வார்டு வேட்பாளர் எம்.மதிவாணன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் தான் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவேன், எப்படி எல்லாம் செயல்படுவேன் என்பவற்றை எடுத்துக்கூறி  உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் தான் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நீண்ட பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட அடிப்படை பிரச்சினைகளை கவனித்து உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.