கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது!
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில், தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னூர் ஹைரோட்டில் கடந்த 11ம் தேதி சாலையில் சென்றவரிடம் கத்தியை காண்பித்து ரூ.1000 ஆயிரம் பறித்து சென்றதாக தில்லைநகர் காவல்நிலையத்தில் பணம் பறிகொடுத்தவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் எதிரியான வெந்தகை பாலா என்கிற பாலமுருகன் (வயது 37) என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான எதிரி வெந்தகை பாலா என்கிற பாலமுருகன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, மேற்படி எதிரி வெந்தகை பாலா என்கிற பாலமுருகன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.