கொடியாலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் முற்றுகை

0 400
Stalin trichy visit

திருச்சி முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது
ஊராட்சி முழுவதும் காவிரி குடிதண்ணீர் தடையின்றி வழங்க வேண்டும். பழுதடைந்த சலையை சீரமைத்து தர வேண்டும். பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும். பாசன மற்றும் வடிகால் வாய்க்காலை சர்வே செய்து தூர்வார வேண்டும். தபால் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் அமைத்து தர வேண்டும். 100 நாள் வேலையில் நடைபெறும் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு கொடியாலம் கிளை செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வினோத்மணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் சகுந்தலா பேச்சு வார்த்தை நடத்தி முதல் பணியாக குடிதண்ணீர் சரிசெய்து தரப்படும் என்றும், மற்றவைகள் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.