திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 21). இவர் படித்து முடித்து வேலை தேடி வருகிறார். இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாக அறிந்த அவர் புதுடில்லியில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் போனில் நேர்முகத்தேர்வை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் அவருடைய தந்தை சுப்பிரமணியத்துக்கு செல்போன் மூலம் வந்த அழைப்பில் பல்வேறு தகவல்களை கேட்டுப் பெற்றுக்கொண்ட அந்த மர்ம நபர் அவரிடமிருந்து ரூ.5 மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்துமாறு கேட்டுள்ளார். அதன்படி 5 ரூபாயை மட்டும் அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின் ரூ.68 ஆயிரத்து 300-ஐ மர்ம நபர்கள் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து திருடியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.