“நடராஜபுரம் ஜல்லிக்கட்டு” சீறிப்பாய்ந்த 700 காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய 400 வீரர்கள்!

0 341
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியை திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் 9 மணிக்கு தொடங்கி வைத்து ஜல்லிக்கட்டு வீரர்களை உறுதிமொழி எடுக்க செய்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் துளசி மகாநாட்டை சேர்ந்த பழங்கனாங்குடி மாரியம்மன் கோவில் மடு அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பிறகு துவாக்குடி, நட்ராஜபுரம் கோவில் மாடும் அவிழ்த்துவிடப்பட்ட பிறகு முறையாக மாடு அவிழ்த்துவிடப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை,

கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700 ஜல்லிக்கட்டு காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் சேர், அண்டா பரிசுகள் வழங்கப்படுகிறது. திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், காயம் அடைந்தவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ உதவியும் அளித்தனர். திருச்சி கால்நடை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டியில்

 

கலந்து கொள்வதற்கு தகுதியுடன் இருக்கிறதா? என்பது குறித்து சோதனை செய்தனர். திருவெறும்பூர் பொறுப்பு டிசிஆர்பி டிஎஸ்பி திருவெறும்பூர் (பொறுப்பு) ஜெயசீலன் தலைமையிலான 137 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் முறைகேடு நடப்பதை தவிர்க்கும் பொருட்டு 20 ரூபாய் தாளுடன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அந்த 20 ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும் டோக்கனில் உள்ள எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.