சமயபுரம் மாரியம்மன் கோவில் விரிவாக்க பணி- அரசுசெயலாளர் ஆய்வு

0 310
Stalin trichy visit

திருச்சிசமயபுரம்மாரியம்மன்கோவிலில்பெருந்திட்ட விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி விரிவாக்கம் செய்வதற்கான இடங்களையும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள்குறித்தும்இந்துசமயஅறநிலைத்துறை, சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை அரசு முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவும் சென்றார். அதைத்தொடர்ந்து சமயபுரம் கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறுவளர்ச்சிபணிகளையும் பஸ் நிலையப் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அன்னதானக் கூடத்தில் ஆய்வு செய்த அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவின் தரத்தினை சாப்பிட்டு பார்த்து பரிசோதித்தார். பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை செய்து தரும் வகையில் கோவில் விரிவாக்கப்பணிகளைசிறப்பாகமேற்கொள்வதற்கானஅறிவுரைகளையும் அவர் வழங்கினார். அப்போது உடன் சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.