திருச்சியில் வழிந்தோடிய பாதாள சாக்கடை – புகார் கொடுத்த பத்து நிமிடத்தில் தீர்வு!
திருச்சி மாநகராட்சி உட்பட்ட ஆழ்வார்தோப்பு 49வார்ட் பகுதியில் கடந்த 15 நாட்களாக பாதாளசாக்கடை பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஆழ்வார்தோப்பு சத்யா நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து உடனே அந்த பாதாள சாக்கடை பிரச்சினையை சரி செய்தார்.

இந்த நிலையில் இன்று ஆழ்வார்தோப்பு குறுக்கு சந்து பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது அதை கண்ட பொதுமக்கள் உடனே நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேருவுக்கு புகார் கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்ரவின்படி பத்து நிமிடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு உடனே மாநகராட்சி பணியாளர்களை அழைத்து சரி செய்ய உத்தரவிட்டனர்.

மாநகராட்சி பணியாளர்கள் மிகவும் சிறப்பான முறையில் அந்த இடத்தை சரி செய்து உள்ளனர். அங்கு வசிக்கும் பொதுமக்கள் புகார் அளித்த பத்து நிமிடத்தில் சரி செய்ய உத்தரவிட்ட நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்களுக்கும், மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA