மேல்நிலை பொதுத்தோ்வு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

0 389
Stalin trichy visit

மேல்நிலை பொதுத்தோ்வு மார்ச் 2014-ம் ஆண்டு முதல் செப்டம்பா் 2018-ம் ஆண்டு வரையிலான காலத்தில் தேர்வு எழுதிய தனித்தோ்வா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தோ்வா்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

எனவே இந்த பருவத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறப்படாத தனித்தோர்வா்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும் என்பதால் இதனை பயன்படுத்தி ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தைக் குறிப்பிட்டு தேர்வு எழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வு எழுதிய பாடம் மற்றும் தோ்வு மையத்தின் பெயா் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு ரூ.45-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து, உதவி இயக்குனர் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் வில்லியம்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம் திருச்சி என்கிற முகவரிக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.