திருச்சி ஜங்ஷன் முன்பாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.
ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று வழங்கிய பெட்டியை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளை திறந்துவிட வலியுறுத்தி திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை சோ்ந்த மாற்று திறனாளிகள் இன்று திருச்சி ஜங்சனில் உள்ள தெற்கு மண்டல ரயில்வே மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.மாற்றுதிறனாளிகள் கூட்ட நெரிசல்களில் சிக்கி பயணம் செய்ய முடியாது என்பதாலும், பயணங்களில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், என்ற சட்டவிதிகள் அடிப்படையிலும், நீதிமன்றங்களில் தீா்ப்புகள் அடிப்படையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில்களில் சிறப்பு பெட்டிகள் உருவாக்கப்பட்டன.ஆனால் கொரோனாவை காரணம் காட்டி கடந்த 2 ஆண்டுகளாக அப்பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை,அந்த பெட்டியில் தங்களுக்கு வேண்டபட்டவா்கள் பயணம் செய்வதற்கு அதிகாரிகள் பயன்படுத்தி வருவதால் மாற்றுதிறனாளிகளுக்கு என்று உருவாக்கப்பட்ட பெட்டிகளை திறந்துவிட வேண்டும் என்று அறிவிப்பு பலகையுடன் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள் 150 போ் பின்னர் கைது செய்யப்பட்டனா்.